போளூர் கிளை சிறையில் கைதிகளுக்கு கொரோனா

வீரலூர் கிராம கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 10 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி;

Update: 2022-01-22 01:45 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பதால் இனிவரும் நாட்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக உயரும் வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் கலசப்பாக்கம் அருகே வீரலூர் கிராமத்தில் மயான பாதை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது .அப்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு போளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்று பரிசோதனை முடிவுகள் வெளியானது.  இதில் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒன்பது பேருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வழிப்பறி வழக்கில் கைதான நபர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 10 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News