போளூர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-11-05 10:15 GMT

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக போளூர்  தாலுக்கா பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள்     போளூர் நகரம் , கலசப்பாக்கம் , முருகபாடி, ராந்தம், அத்திமூர், மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை ஆறாம் தேதி   மின்  நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News