திருவண்ணாமலையில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மின்வாரிய அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகளை கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-10-12 09:02 GMT

சேத்துப்பட்டு மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்து பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்து பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மின்வாரிய ஊழியர்கள் கோட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நுகர்வோர்களுக்கு குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பெண்கள் கழிவறை  சரிசெய்யப்பட வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மின்வாரிய தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News