போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மகளிருக்கான இலவச தையல் பயிற்சி
போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மகளிருக்கான இலவச தையல் பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது;
போளூர் லயன்ஸ் சங்கம் மற்றும் படவேடு சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கஸ்தம்பாடி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக 67 மகளிருக்கு இலவச தையல் பயிற்சியை வழங்கி வந்தனர். இந்தப் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா கஸ்தம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .
இந்த நிகழ்விற்கு போளூர் லயன்ஸ் சங்க தலைவர் திருமுகம் தலைமை தாங்கினார் மாவட்ட லயன்ஸ் மாவட்ட ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ஆர். அன்பரசு, பயிற்சி முடித்த 67 மகளிருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார் பொருளாளர் பாண்டியராஜன், பள்ளி தலைமையாசிரியர் சரவணன் படவேடு சீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் சமூக வளர்ச்சி அலுவலர் கதிர்வேலன் ,ஊராட்சி மன்ற தலைவர் , ஒன்றிய கவுன்சிலர்கள் , உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் . சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் சிவபாலன் நன்றி கூறினார்.