போளூர் பகுதியில் மதுபானபாட்டில்கள் பறிமுதல்
போளூர் மற்றும் செய்யாறு பகுதிகளில் மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கடலாடி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, கடலாடி காவல்நிலைய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் விமல்குமார் மற்றும் காவலர்கள் இணைந்து கடலாடி மேற்குத் தெருவில் தேடுதல் வேட்டைநடத்தினர்.
அப்போது, கடலாடி மேற்கு தெருவைச் சேர்ந்த சீனுவாசன் என்பவரின் வீட்டின் முன்புறம் 89 வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர், அவற்றை பறிமுதல் செய்து சீனுவாசனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தரவின் பேரில், செய்யாறு வட்ட காவல் ஆய்வாளர், சீனிவாசன் , மோரணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் காவலர்கள் இணைந்து, இராந்தம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, மீன் பெட்டிகளுக்கிடையே 21 ஆந்திர அரசு மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
வாகனம் மற்றும் மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகனத்தில் மரக்காணம், கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முரளி, ரவிக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.