காவல்துறை சார்பில் போளூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

போளூரில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-10 06:15 GMT

போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,  மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் காவல்துறை ஆய்வாளர் கவிதா கலந்து கொண்டு பேசுகையில்,  மாணவிகள் அறிமுகமில்லாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால்,  பேசக்கூடாது. பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட வேண்டும்.

நல்ல தொடுதல்,  கெட்ட தொடுதல் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரிடம் பேசக்கூடாது. பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக சப்தம் எழுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் . காவல் நிலையத்தின்  தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில்,  காவல் உதவி ஆய்வாளர் மீனாட்சி, பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News