திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச.14ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் சந்தவாசல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 14ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை இரண்டு மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
சந்தவாசல், புஷ்பகிரி ,துளுவ புஷ்பகிரி, நாராயண மங்கலம், ஏரி குப்பம், பாளையம், நடுக்குப்பம், கீழூர், விளாங்குப்பம், வடமாதிமங்கலம், படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், அழகு சேனை, அத்திமலை பட்டு, அம்மாபாளையம், மேல்நகர், கண்டமங்கலம், கொளத்தூ,ர் குப்பம் ,வழியூர், காலா சமுத்திரம் ,ரெட்டிபாளையம், கல்பட்டு, வெள்ளூர், ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
அதேபோல் விண்ணவனூர் பகுதிகளில் 14 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
விண்ணவனூர், பாச்சல், குப்பன் தாங்கள், கண்ணை குறுக்கை , அம்மாபாளையம், கொட்டை குளம், இறையூர், பிஞ்சுர், சொரப்பநந்தல், உச்சிமலை குப்பம், மேல் பெண்ணாத்தூர், மேல் முடியனுர் ,பூங்குட்டை, தொரப்பாடி, கல்தாம்பாடி , அரட்டை வாடி ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேத்துப்பட்டு கோட்டம், மழையூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மழையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரணமல்லூர், மோசவாடி, செத்தாங்குளம், கோதண்டபுரம், வேளச்சேரி, கோழிப்புலியூர், அரசம்பட்டு, மேலத்தங்கள், தவனி, விஷாமங்கலம், வல்லம், கடம்பை, சாத்தப்பூண்டி, வடவணக்கம்பாடி, தென்னாத்தூர், மடம், இசா கொளத்தூர், வயலூர், பூங்குணம், தேசூர் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார்.