ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி போராடி மீட்ட பொதுமக்கள்

கண்ணமங்கலம் அருகே நாகநதி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை கயிறு கட்டி போராடி மீட்ட பொதுமக்கள்;

Update: 2021-07-13 07:20 GMT
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி போராடி மீட்ட பொதுமக்கள்

நாகநதி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி 

  • whatsapp icon

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கண்ணமங்கலம் அருகே உள்ள நாக நதியில் பள்ளிப்பட்டு வழியாக ஆற்றில் நடந்து செல்வது வழக்கம்.

இந்த நதிக்கரையில் மறுபக்கம் செல்ல இந்த ஆற்றை கடந்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் குமரேசன் என்ற கூலி தொழிலாளி வேலைக்கு செல்வதற்காக ஆற்றை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஆற்றில் பாதி தூரத்தை கடந்த நிலையில் நடு ஆற்றில் அதி வேகமாக சென்று கொண்டிருந்த நீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டு காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். அங்கிருந்த கிராம மக்கள் அவரை கயிறு கட்டி போராடி மீட்டு உள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உடனடியாக பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News