போளூர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்.
போளூர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய மக்களால் கொரோனா பரவும் அபாயம்
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், போளூர் கன்னிகா பரமேஸ்வரி தெரு ரேஷன் கடையில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.