போளூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

போளூர் வட்டத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது

Update: 2021-11-18 07:43 GMT

போளூரில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாம் 

போளூர் வட்டம் விளாபாக்கம்  கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தலைமையில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் மொத்தம் 104 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 27 பட்டா மாறுதல்  மற்றும் 2 முதியோர் உதவித்தொகை ஆகியவற்றுக்கு  தீர்வும் அளிக்கப்பட்டது . 2 நபர்களுக்கு முழு புல பட்டா மாறுதல்களும்,  2 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார், வட்ட துணை ஆய்வாளர் சரவணன், மண்டல துணை வட்டாட்சியர், சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம்  பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News