சேத்துப்பட்டு அருகே கொங்காபுரத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
சேத்துப்பட்டு தாலுகா கொங்காபுரம் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கொங்காபுரம் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது. முகாமிற்கு சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
இதில் பட்டா மாறுதல் புதிய பட்டா பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட நில அளவை துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36 பேர் மனு அளித்திருந்தனர்.
இதில் உரிய ஆவணம் உள்ள 7 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக நலத்திட்ட உதவிகளை பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திராஇளங்கோவன் வழங்கி பேசினார். முகாமில் வருவாய்த்துறையினர் நிள அளவை துறையினர் ஊர் பொதுமக்கள், பெரியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.