நாடாளுமன்ற தேர்தல் பணி; பாஜக ஆலோசனை
போளூா், ஆரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோந்த பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மற்றும் மண்டலத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர்.
போளூா், ஆரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோந்த பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மற்றும் மண்டலத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். ஆரணி தெற்கு மண்டலத் தலைவா் ராஜேஷ், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் தணிகைமலை வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் கோட்டப் பொறுப்பாளா் தசரதன் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா். வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அப்போது வாக்குச்சாவடிகளில் பொறுப்பாளர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், மண்டல தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்
ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் மற்றும் போளூா், ஆரணி நகர, ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.