கனககிரி ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டத் திருவிழா
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கனககிரி ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள கனககிரி ஈஸ்வரர் பெரியநாயகி தாயார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. முப்பத்தி ஒன்றாம் தேதி காலை கோவில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன் சமேத கனககிரி ஈஸ்வரர் மரத்தேரில் அமர்த்தி தேரோட்ட திருவிழா தொடங்கியது.
முதல் தேரில் கனககிரி ஈஸ்வரர், பெரியநாயகி தாயாரும், 2-வது தேரில் பெயரிநாயகி தாயாா் மட்டும் எழுந்தருளினர்.
முன்னதாக தேர் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் மாட வீதிகள் வழியாக தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது.
மாலை 6:00 மணிக்கு அம்மன் தேரோட்ட திருவிழா தொடங்கியது இதில் தேவிகாபுரம் பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் வனம்பிடித்து தேர்வு வீத்தனர் மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நீர்மோர் அன்னதானம் பழ வகைகள் வழங்கப்பட்டது.
வரும் ஏழாம் தேதி உடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது . விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.