15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போளூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-10-20 08:23 GMT

போளூர்  ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

இதில் கிராம ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு மாத சம்பளத்தை கருவூலம் மூலம் வழங்குவதோடு மூன்றாண்டுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,  தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்சம் கூலித் தொகை 10 ஆயிரம் வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் கணினி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்   உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News