போளூா் பேருந்து நிலையம் எதிரே வெளிவட்டச் சாலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு

போளூா் பேருந்து நிலையம் எதிரே வெளிவட்டச் சாலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-10-11 12:24 GMT

சாலைகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே ரூபாய் 25 லட்சத்தில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கோவை, சேலம் ,திருப்பூர், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளுக்கு செல்ல போளூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போளூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் வந்து செல்வர்.

போளூா் பேருந்து நிலையம் எதிரே திருவண்ணாமலை, வேலூா் செல்லும் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்து, திருப்பதி -திருவண்ணாமலை பேருந்துகள், பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் நிலையம் எதிரே சாலையிலேயே திரும்புவதால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் போளூர் பைபாஸ் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை உயர் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா அமைக்க ரூபாய் 25 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் .

இந்த பணியை போளூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு பேருந்து நிலையத்தின் சாலைகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து எந்த அளவில் கட்டினால் போக்குவரத்து பாதிக்காது என ஆய்வு செய்தார். ஆய்வின்போது போளூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போளூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் , வருவாய்த்துறை, அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

சாலை பணிகளை ஆய்வு செய்த உதவி கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மறு சீரமைப்பில் போடப்பட்ட சாலை பணிகளை உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு செய்தார்.

புதிதாக போடப்பட்ட சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற உதவி கலெக்டர் 3 இடங்களில் சுத்தி மற்றும் கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தலைமை செயற்பொறியாளர் ஆனந்தி, தலைமை செயற்பொறியாளர் ஆனந்தி, உதவி செயற் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News