சேத்துப்பட்டு அருகே புதிய நியாய விலை கடை கட்டிடப் பணிகள் துவக்கம்

சேத்துப்பட்டு அருகே பு ரூ.10 லட்சத்தில் புதிய நியாய விலை கடை கட்டிட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.;

Update: 2024-03-07 01:09 GMT

நியாய விலை கடை கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவி மங்கலம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜையில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது;

சேத்துப்பட்டு பஞ்சாயத்து யூனியன் தேவி மங்கலம் கிராம மக்கள் புதிய நியாய விலை கடை கட்டித்தர வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து தற்போது இந்த கோரிக்கை குறித்து என்னிடம் மனு கொடுத்தனர். மேலும் தேவி மங்கலத்தில் புதிய நியாய விலை கடை கட்டிய தீர வேண்டும் என முன்னாள் தலைவர் மோகன் என்னிடம் மனு அளித்தார்.

இதனை ஏற்று தேவி மங்கலத்தில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் ஒதுக்கீடு செய்து கொடுத்தேன். மேலும் இந்த கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

ரூபாய் பத்து லட்சம் செலவில் கோயிலுக்கு செல்லும் சாலை தற்போது சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்சனை உள்ளது என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் செலவில் மினி குடிநீர் டேங்க் கட்டி தரப்படும்,  மேலும் கண்டிப்பாக சலவை தொழிலாளர்களுக்கு மயான பாதை அமைத்துக் கொடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி உடனே நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் என்னிடம் தெரிவியுங்கள்,  உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, விவசாய அணி துணைச் செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர் ,  போளூர் ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News