தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்

75-வது சுதந்திர தினத்தையொட்டி போளூரில் அஞ்சல் துறை சார்பில் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-08-10 01:01 GMT

தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம், கோட்ட கண்காணிப்பாளர் அமுதா கொடியசைத்து தொடங்கிவைத்தார்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, இல்லந்தோறும் மூவர்ணம் என்னும் பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மேலும் தேசிய கொடிகள் விற்கும் பணி அஞ்சல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி போளூர் பகுதிகளில் இல்லங்களில் தேசிய கொடி இடம்பெற தேசிய கொடி ஊர்வலம் போளூரில் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கிவைத்தார். அஞ்சல் ஆய்வாளர் சாந்தா வடிவேல், அஞ்சலக அதிகாரி சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, அஞ்சலகத்தை அடைந்தது. இதில் கோட்ட அஞ்சலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். போளூரில் பொதுமக்கள் ஆர்வமுடன் தேசியகொடியை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News