சேத்துப்பட்டில் மழைக்கால பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

Meeting News -சேத்துப்பட்டு ஊராட்சியில் மழைக்கால பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-04 01:12 GMT

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர் ராணி அர்ஜுனன்,துறை அரசு அதிகாரிகள்.

Meeting News -சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மழைக்கால பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டத்தில் அதிகாரிகளுடன் மழைக்கால பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன் , தலைமையில் நடைபெற்றது .

ஒன்றிய ஆணையாளர்கள் சத்தியமூர்த்தி, வேணுகோபால், ஒன்றிய குழு துணைத் தலைவர் முருகையன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அனைவரையும் மேலாளர் மூர்த்தி வரவேற்றார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் பேசுகையில்,  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது .  தற்போது சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் ,   குளங்கள் நிறையும் தருவாயில் உள்ளது  . மேலும் பள்ளி கட்டிடங்கள் , அரசு அலுவலகங்கள்  மற்றும் பொதுமக்கள் வீடுகள் ,  ஆகியவற்றின் நிலையை , தன்மையை  உணர வேண்டும். 

மழை நீர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .  கிராமங்கள் தோறும் நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும் .  இதற்கான ஏற்பாடுகளை நாம் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் . 

மேலும் பொது மக்களுக்கு அரசின் திட்டங்கள் தங்கு தடை இன்றி கிடைத்திடவும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும் பயனாளிகளுக்கு உரிய தீர்வை உடனடியாக செய்து தர வேண்டும்.

பள்ளி கட்டிடங்கள் சத்துணவு மையங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைப்பதும் புதிய கட்டிடங்கள் கட்டுவதும் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் மழைக்கால பேரிடர் மேலாண்மைக்காக வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ஒன்றிய குழு தலைவர் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் பொறியாளர்கள் ஜெயந்தி மாதவி மனோகரன் பணி மேற்பார்வையாளர்கள் பாலாஜி ஜெயவேலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பெரணமல்லூர்

பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் யூனியன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

யூனியன் சேர்மன் இந்திரா தலைமை வகித்தார்.  பிடிஓ மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார்  . துணை தலைவர் லட்சுமி வரவேற்றார்.

அப்போது பெரணமல்லூர் பஞ்சாயத்து தலைவர் இந்திரா பேசுகையில்,  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசு துவக்கப்பள்ளி  , நடுநிலைப்பள்ளி ,  மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைகள்,   சமையலறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிக்க வேண்டும். எங்கும் நீர் தேங்க கூடாது.

பள்ளி கட்டிடங்கள் ,அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் ஆகியவற்றின் நிலை மற்றும் தன்மையை உணர வேண்டும் என கூறினார். 

கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மேலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News