அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
அதிமுக சார்பில் நடைபெற்ற உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பங்கேற்றார்.;
ஆரணி தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் இந்திர வனம், உலகம் பட்டு , நம்பேடு, தச்சம்பட்டு, நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, மற்றும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்கள் அப்போது மாவட்ட செயலாளர் ஜெசுதா பேசுகையில்
சைக்கிள் ,பேன் , கிரைண்டர் லேப்டாப் என இவைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
முதியோர் உதவித்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து உயர்த்தி தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார் . ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. மேலும் குடும்பப் பெண்கள் நிறைய பேருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படவில்லை ஒரு பொய்யான ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார்.
சொன்னதையும் சொல்லாததையும் ஏழை எளிய மக்களுக்கு செய்து கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றினார் .
விரைவில் கட்சி தேர்தல் நடக்க உள்ளதால் புதிய உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் புதுப்பிக்கப்படும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் .
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் தோல்வி நமக்கு நிரந்தரமானது அல்ல நம்முடைய ஒரே நோக்கம் வருகிற சட்டசபை தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வர் ஆக்குவதே நமது லட்சியமாக கருத வேண்டும் அதற்கு நாம் முழுமையாக இப்போது இருந்தே பாடுபட வேண்டும் என ஜெயசுதா பேசினார்.
தொடர்ந்து போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் நகரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி வடக்கு ஒன்றியம் பகுதிகளில் கிளை கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை,வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், கழக நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.