போளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

போளூரில் எல்ஐசி முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-02 13:44 GMT
போளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

போளூரில் எல்.ஐ.சி. முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • whatsapp icon

போளூரில் எல்.ஐ.சி. முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஜி.வேலாயுதம் தலைமை வகித்தார். செயலாளர் சுரபி ராஜன் வரவேற்றார்.

பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்த வேண்டும், பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும், முகவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முடிவில் பொருளாளர் சுகுனகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News