போளூரில் மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

National Identity Card -மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2022-09-30 01:32 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி போளூரில் நடைபெற்றது.

National Identity Card -திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

இதில் போளூர் வட்டத்தை சேர்ந்த விடுபட்ட மாற்று திறனாளிகள் 97 பேரில் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News