பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இருளர் சமூகத்தினர்!
தங்களுக்கு பாதுகாப்பு கூறி இருளர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா அனந்தபுரம் காந்தி நகர் கிராமத்தில் ராணி ராம்ராஜ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நில ஒப்படைப்பு மூலம் சுமார் 4 ஏக்கர் நிலம் அரசாங்கம் வழங்கி உள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர். இவர் ராணிக்கு சொந்தமான வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் போக்குவரத்துக்கு வழி கேட்டு தகராறு செய்வதாகவும் அவர்கள் வீட்டின் முன் உள்ள இடத்தை டிராக்டர் மூலம் உழுது அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் ராணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் ராணிக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைக்க உள்ளதாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
சம்பத்தின் மகன் முருகன் மற்றும் சரவணன் ஆகியோர் கும்பலாக சென்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராணி வீட்டிற்கு வந்து உழுத போது ஏன் என் வீட்டிற்கு முன்பு டிராக்டர் மூலம் உழுகிறீர்கள் என்று தனியாக இருந்த ராணி கேட்டதற்கு ராணியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது முடியை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தனர் .
அப்போது இருளர் சமுதாயத்தை சேர்ந்த நீ ஏன் கேள்வி கேட்கிறாய் என்று கூறி ராணியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளனர். மேலும் அரசாங்க இடத்தை நாங்கள் பயிர் வைப்போம், இருளர் இனத்தை சேர்ந்த நீங்கள் பயிர் வைக்கக்கூடாது என்று தொடர்ந்து இருளர் சமுதாயத்தினரை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரியது விசாரணை மேற்கொண்டு ராணியை ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பத்தின் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , ராணிக்கு சொந்தமான இடத்தை அராஜகமான முறையில் பயிர் செய்து வரும் நிலத்தை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 20 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களிடம் கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.