மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி சுகாதார ஆய்வாளர் பலி

போளூர்-வேலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் மீது மினி லாரி மோதியதில் சுகாதார ஆய்வாளர் பலியானார்

Update: 2022-02-09 07:03 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும்  விஜயா.  போளூர் காதர் பாட்சா தெருவில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் ஜெயசூரியா ( 23) ஆரணியை அடுத்த குன்னத்தூரில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணிமுடிந்ததும் மோட்டார் சைக்கிளில் போளூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

போளூர்-வேலூர் சாலையில் பாக்மார்பேட்டையில் வந்தபோது எதிரே வந்த  மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயசூரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனிடையே விபத்தை ஏற்படுத்திய  மினி லாரி நிற்காமல் சென்று விட்டது. 

இது குறித்த பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூரியாவின் உடலை  மீட்டு  உடற்கூராய்வுக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான மினிலாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News