பேத்தியை கர்ப்பிணியாக்கிய தாத்தா, போக்சோவில் கைது..! என்ன கொடுமைடா சாமி?

போளூர் அருகே பேத்தியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-30 03:33 GMT

போளூர் தாலுகா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். அவர்கள் விவசாய பொருட்களை விற்கச்  செல்லும்போது அதே பகுதியில் வசிக்கும் தாத்தா உறவுமுறை கொண்டவர் வீட்டில் மகளை விட்டுச்செல்வது  வழக்கம். 

இந்த நிலையில் அந்த சிறுமியை பேத்தி முறை என பார்க்காமல் அந்த முதியவர் உல்லாசமாக இருந்துள்ளார். பல நாட்களாக இது தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரியவந்தது.சிறுமிக்கு  உடல்நலக்  குறைவும் ஏற்படவே பெற்றோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வரவே அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மருத்துவ குழுவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவத்தை கூறினாள். இதனையடுத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான  முனியன் (வயது 60 ) என்பவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

........................................................................................

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனவர்கள் சியாமளா, முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் அருள்மொழி முருகேஸ்வரி வெங்கடேசன் சிலம்பரசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ராதாபுரத்தை அடுத்த பண்ணையாறு வீரணம் கிராமம் அருகே காப்புக்காட்டை ஒட்டிய பட்டா நிலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் காட்டுப்பன்றியை கொன்று இறைச்சியை கூறுபோட்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று அவர்களை வனத்துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில் சுப்பிரமணி மகன் மணிகண்டன் , வேலு மனைவி பச்சையம்மாள் என்பது தெரியவந்தது.

இவர்கள் பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததும் அதில் சிக்கி இறந்த காட்டுப்பன்றியை சமைப்பதற்காக கூறுபோட்டதும் தெரியவந்தது. இருவரையும் வனத்துறையினர் கைது செய்து 8 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

இருவரும் வனச்சரக அலுவலகத்துக்கு  கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி இருவருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்  தொகை செலுத்திய பின் இருவரும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News