போளூர் அரிமா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா
போளூர் அரிமா சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது;
போளூர் அரிமா சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அண்ணா பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அரிமா சங்கத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அன்பரசு, சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார தலைமை மருத்துவர் மணிகண்டபிரபு தலைமை வகித்தார் ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகி சந்திர சேகர் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் மணி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார் . இம்முகாமில் ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு , கொழுப்பின் அளவு, ரத்த அழுத்த அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.