பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதி அளிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு அரசு நிதி அளிக்கப்பட்டது.

Update: 2024-03-18 10:52 GMT

அரசு நிதிக்கான பத்திரத்தை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றியக் குழுத் தலைவா் வழங்கினாா்.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்திபெருமாள் வழங்கினாா்.

தமிழக அரசு சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காங்கேயனூா் கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள், போளூரை சேர்ந்த சித்ரா ஆகிய 2 பயனாளிகளின் பெண் குழந்தைகளுக்கு நிகழ் நிதியாண்டு திட்டத்தின் கீழ் அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றிக் குழுத் தலைவா் சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல், சமுக நலப் பிரிவு அலுவலா் அஞ்சலிதேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலகிருஷ்ணன்(சத்துணவு), சங்கா்(பொது) ஆகியோா் உடனிருந்தனா்.

இளையோா் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி முகாம்

ந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை இரா.தேவி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜாக்குலின் முன்னிலை வகித்தாா். சங்க ஆலோசகா் இதாயத்துல்லாபேக் வரவேற்றாா். தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரங்கநாதன், தரணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) ஜெயசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினா்.

முகாமில், கண் தானம், ரத்த தானம் குறித்த பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், இதே கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், பள்ளி ஆசிரியைகள் லிடியா , குமாரி, மேகலா, ராசாத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News