ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் இலவச திருமணம்
சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் இலவச திருமணம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் இலவச திருமணம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருவண்ணாமலை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட தகுதியான ஜோடிகளுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்தமிழக அரசின் ஆணைப்படி ஒரு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், இணை ஆணையர் சுதர்சன் , உதவிய ஆணையர் ஜோதிலட்சுமி, ஆகியோர் முன்னிலையில் இந்த திருமண வைபவம் நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை திருக்கோயில் சார்பாக 4 கிராம் மாங்கல்யம், பட்டுபுடவை, பட்டு வேட்டி, சட்டை, கைகடிகாரம், பூஜை பாத்திரங்கள், பீரோ,கட்டில், மெத்தை பாய் தலையணை,பாத்திரங்கள் என சீர்வரிசை பொருட்கள் மணமக்கள் குடும்பத்தார்கு மண விருந்து ஆகியவை வழங்கப்பட்டது.
விழாவில் ஆய்வாளர் நடராஜன், செயல் அலுவலர் சரண்யா மற்றும் பெரணமல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன், மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் , ஒன்றிய செயலாளர்கள், திருக்கோயில் ஊழியர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.