முன்னாள் லயன்ஸ் சங்க ஆளுநர்களுக்கு பாராட்டு விழா
போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்;
போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத்தலைவர் திருமுகம் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர்கள் கவுரவிக்கப்பட்டனர். லயன்ஸ் சங்க மாவட்ட ஜி ஏ டி ஒருங்கிணைப்பாளர் ஆர் அன்பரசு, முன்னாள் மாவட்ட ஆளுநர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பேராசிரியர் ரத்னா நடராஜன், டாக்டர் நரசிம்மன், அரவிந்த் குமார் , வி.எஸ் .தளபதி, முருகப்பா ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் டாக்டர் சுகந்தி அன்பரசு, சுரேஷ், மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்