ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஐந்து சதவீத ஊக்கத்தொகை

போளூர் பேரூராட்சியில் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-27 10:23 GMT

போளூர் பேரூராட்சி அலுவலகம் (கோப்பு படம்).

போளூர் பேரூராட்சியில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஐந்து சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கீழ் இயங்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம் என அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் சொத்து உரிமையாளர்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் தெரிவிக்கையில்

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் 1988 ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13/4/23 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84/1 ன். படி சொத்து வரி செலுத்துவோர் அதிகபட்சம் ரூபாய் 5000 ஊக்கத்தொகை பெறலாம்.

சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 நிதி ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வருகின்ற 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

பேரூராட்சிக்கு எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகையை பெற்று இதன் மூலம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார். 

அப்போது செயல் அலுவலர் முகமது ரிஜுவான், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News