முதல்வா் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

தமிழக முதல்வர் பிறந்த நாளில், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Update: 2024-03-04 02:17 GMT

முதல்வர் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த மாவட்ட செயலாளர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி முதல்வர் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

ஆரணி அடுத்த வெட்டியந் தொழுவம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் முருகம்மாள் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்ச் ஒன்றாம் தேதி அன்று மெய்யுரை சேர்ந்த அர்ச்சனா தேவி என்பவருக்கு பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் பரிசாக வழங்கினார்.

மேலும் குழந்தைக்கு தேவையான பரிசு பொருட்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் ஹேம்நாத்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், எதிரொலி மணியன், தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் மணி, மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து போளூரில் திமுக சார்பில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் மார்ச் ஒன்றாம் தேதி அன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன், போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், களம்பூர் பேரூராட்சி உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News