பேரூராட்சி குப்பை கிடங்கிற்குச் செல்லும் பாதையை சீரமைக்க கோரிக்கை
போளூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கிற்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேரூராட்சிக்குச் சொந்தமான திட்டக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்க குப்பை கிடங்கிற்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
போளூா் பேரூராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்க குப்பை கிடங்கு சனிக்காவடி அருகே அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் உள்ள நிலத்தில் நெல், கரும்பு, சோளம் என பல்வேறு வகையான பயிா்களை விவசாயிகள் சாகுபடிசெய்து வருகின்றனா்.
இந்த நிலையில், இப்பகுதி விவசாய நிலத்துக்குச் செல்ல விவசாயிகளுக்கு பொது பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் போளூா் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை டிராக்டா், லாரி மூலம் எடுத்துச் செல்கின்றனா். இதனால், பாதை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இந்த பொது பாதையை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
மனுவினை பேரூராட்சித் தலைவா் ராணி சண்முகம், செயல் அலுவலா் முகமது ரிஸ்வான் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது வாா்டு உறுப்பினா் மல்லிகா கிருஷ்ணமூா்த்தி, தலைமை எழுத்தா் முகமது இசாக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
போளூர் பகுதியில் களை கட்டிய மாட்டு சந்தை, ஒரு கோடிக்கு மேல் விற்பனை
திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் அடுத்த தேப்பந்தல் மாட்டுச்சந்தை மிகவும் பெயர் பெற்ற சந்தையாக விளங்கி வருகின்றது. இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி களர் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன. வேலூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களி இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தற்போது வரையில் இந்த சந்தையில் கைகளில் துண்டு போட்டு மாட்டு விவசாயிகள் விலை பேசும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களாக நடைபெற்ற மாட்டு சந்தையில் விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கி சென்றதாகவும் சுமார் ரூபாய் ஒரு கோடிக்கு மேல். மாடுகள் விற்பனை நடைபெற்றதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாட்டு வியாபாரிகளும் , விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.