கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-26 02:51 GMT

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கொம்மனந்தல் சமுதாயகூடத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன். மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலை கோட்ட செயலாளர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்கிறார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் பேசும் போது, தரணி சரக்கரை ஆலை 2019-க்குப் பிறகு மீண்டும் அரைவைக்கு திறப்பதை வரவேற்கிறோம். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வட்டியுடன் வழங்கவேண்டும், ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு 3 தவணையாக வழங்கும் நிலுவைத் தொகையை 2 தவணையாக வழங்க வேண்டும்.

தரணி சா்க்கரை ஆலையால் நிலுவைத்தொகை பெறாத கரும்பு விவசாயிகள் குடும்பத்துடன் வந்து ஜூன் 26-ஆம் தேதி போளூா் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

செய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில், கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் ஊரக வேலை உறுதித் திட்ட தினக்கூலியை 319-ஆக உயா்த்திய மத்திய அரசுக்கும், அரசாணை பிறப்பித்த மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்து விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், ஆலை கோட்ட தலைவர்கள் ,நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் சொக்கநாதன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கான கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News