100 நாள் வேலை திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயிகள் குறைதீவு கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் மிகவும் குறைந்த ஊதியமாக ரூபாய் 50, 70 என வழங்குவது ஏன் என விவசாயிகள் கேள்வி கேட்டு காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேத்துப்பட்டு பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,
கடந்த ஆறு மாதமாக நாங்கள் கொடுத்தகோரிக்கை மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவரப்பூண்டி கிழக்கு மேடு ராஜாமபுரம் நம் பேடு வழியாக செல்லும் அரசு பேருந்து சரி வர வருவதில்லை, இதனால் பொதுமக்கள் மாணவர்கள் அரசு ஊழியர்கள் என பல்வே று வகையில் பாதிக்கப்படுகின்றனர். சேத்துப்பட்டு நகரத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சீரமைக்கவேண்டும், தனியாக போக்குவரத்து போலீசார் அமைத்திட வேண்டும்,
கிராமப் பகுதி விவசாயமக்களின் நலன் கருதி உழவர் சந்தை அமைத்திட வேண்டும் என்பது நிண்ட கால கோரிக்கையாக உள்ளது. கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களை விட தற்போது மிகவும் மோசமாக தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கிய 300 முதல் 330 ஊதியத்தை தற்போது ரூபாய் 35 முதல் 70 வரை வழங்குகிறார்கள், எனவே இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினர்.
குறை தீர்வு கூட்டத்தில் தாசில்தார் சசிகலா வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வேளாண்மை அலுவலர்கள் முனியன், மதன்குமார், உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் டி.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் அசோகன் வரவேற்றாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்பேசியதாவது,
செய்யாறு பகுதியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. மூட்டைக்கு ரூ.100 வரை எதிா்பாா்க்கின்றனா். அதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்க அவா்களை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ள முடிவதில்லை .
மேலும், கீழ்புதுப்பாக்கம் - பெரியகோவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. விண்ணவாடி, மாரியநல்லூா், காகனம், வெம்பாக்கம் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.
இந்தச் சாலைகளை உடனடியாக சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும். சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளையும், புதா்களையும் அகற்றவேண்டும் என விவசாயிகள் பேசினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் என பலா் கலந்து கொண்டனா்.