சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.;

Update: 2021-10-30 08:33 GMT

ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய் துறையினர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் ஐம்பத்தி ஆறு ஏக்கரில் அமைந்துள்ள நார்த்தி ஏரியில், அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பேரில்,  வருவாய்த்துறை அதிகாரிகள் ஏரியை அளவீடு செய்து,  அங்குள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த நடவடிக்கையின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்,   காவல்துறை ஆய்வாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்,  ஊராட்சி செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News