துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூர் அருகே துரிஞ்சிகுப்பம் ஊராட்சி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்

Update: 2021-12-01 07:09 GMT

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில் 74 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த ஏரியில்  32 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமித்து நெல், நிலக்கடலை ,உளுந்து என சாகுபடி செய்து வந்துள்ளனர். இதனால் ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியவில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஏடிஎஸ்பி வெள்ளை துரை ஆகியோர் முன்னிலையில் ஏரியை அளவீடு செய்து 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வட்டாட்சியர் சன்முகம் ,சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவலிங்கம் மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர். ஆரணி டிஎஸ்பி தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News