சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மாவட்ட திட்ட அதிகாரி ஆய்வு
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட திட்ட அதிகாரி ஆய்வு செய்தார்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆய்வு செய்தார். ரூபாய் 21லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டார்.
முன்னதாக கொரோனா தடுப்பு பணிகளையும் , தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டு தடுப்பூசியின் அவசியத்தை மக்களிடம் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.