போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்ககோரி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நேற்று மாலை தர்ணா நடத்தினர்.

Update: 2022-02-27 05:45 GMT

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு ஊரக வேலை உறுதி திட்டத்தில் சரிவர பணி வழங்கப்படுவதில்லை. இதை கண்டித்து போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில் நேற்று மாலை தருமம் நடத்தினர்.

இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பச்சை அம்மாவிடம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News