போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

போலீசார் பறிமுதல் செய்த 6059 மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை ஏற்றி நசுக்கி அழித்தனர்.

Update: 2022-03-02 06:20 GMT

போளூரில்   ரோடு ரோலரை ஏற்றி நசுக்கி அழிக்கப்பட்ட போலீஸார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்

போளூரில் 6059, மதுபான பாட்டில்கள் ரோடு ரோலர் இயந்திரம் மூலம் நசுக்கி அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மற்றும் ஆரணி பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை முறைகேடாக கடத்தி விற்பனை செய்தவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஓராண்டில் மது கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பலரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 6059 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்காக  அவற்றை லாரியில் ஏற்றிய மதுவிலக்கு போலீசார்,  கரைபூண்டி ஆற்றுப்படுகையில்  அங்கு மதுபாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்தனர். தொடர்ந்து  டிஎஸ் பி  ராஜன் ,  முன்னிலையில், மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதால், அங்கு மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

Similar News