திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயறுவகை சாகுபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-21 14:27 GMT

சேத்துப்பட்டு அருகே நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயறுவகை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் புதுக்கோட்டை வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு மூலம் சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூா், போளூா், கலசப்பாக்கம், ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உள்ளது. இந்த  பயிற்சி வகுப்பில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த  விவசாயிகள் வேளாண்மை உதவி அலுவலா் நாராயணமூா்த்தி தலைமையில் புதுக்கோட்டை வேளாண் அறிவியில் நிலையம், வம்பன் மற்றும் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு வம்பன் ஆராய்ச்சி நிலைய தலைவா் மற்றும் பேராசிரியா் யுவராஜா, இணைப் பேராசிரியா் ஞானசேகரன், உதவிப் பேராசிரியா்கள் ராம்ஜெகதீஷ், மேனகா, சுகன்யா, பயிற்சி உதவியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா், புதிய பயறு வகைகள், மற்றும் அவற்றின் தன்மைகள், விதை தேர்வு செய்யும் முறைகள், விதைநேர்த்தி செய்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல், களை தடுத்தல், களைக் கட்டுப்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். இந்த பயிற்சி வகுப்பு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அதில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த பயிற்சி வகுப்பிற்கான  ஏற்பாடுகளை சேத்துப்பட்டு வட்டார வேளாண்  தொழில் நுட்ப மேலாளர் சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆனந்த், வினோத், ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News