சேத்துப்பட்டில் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-13 02:01 GMT

சேத்துப்பட்டில்  நடைபெற்ற  நுகா்வோா் குறைதீா் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நுகா்வோா் குறைதீா் கண்காணிப்புக் கூட்டத்துக்கு செய்யாறு துணை ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் சசிகலா, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் காஜா, வட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மண்டல துணை வட்டாட்சியா் கோமதி மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

துணை ஆட்சியா் பல்லவி வா்மா, பொதுமக்களிடம் கிராமப்புறத்தில் உள்ள கூட்டுறவுக் கடைகள் நேரம் தவறாமல் திறக்கப்படுகிா, கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கின்றதா?

கடந்த மாதம் வழங்க வேண்டிய பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படுகின்றனவா எனக் கேட்டறிந்தாா். கூட்டத்தில், வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நுகா்வோா்கள் கலந்து கொண்டனா்

கிராம ஊராட்சிகளில் வட்டார மேம்பாட்டு திட்ட அறிக்கை கலந்துரையாடல் கூட்டம்

திருவண்ணாமலைமாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் வட்டார மேம்பாட்டு திட்ட அறிக்கைதயாரித்தல் ஆண்டு செயல்திட்டம் தயாரித்தல் மற்றும் தொகுதி-1 தயாரித்தல் பணிக்கு லயோலா மேலாண்மை நிறுவனம் சென்னை நிறுவன உதவி பேராசிரியர் சரிதா தொடர்புடைய சார்பு துறை அலுவலர்களுகடனான கலந்துரையாடல் கூட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒன்றிய மன்ற கூட்டரங்கு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை , கால்நடைப்பு பராமரிப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் மருத்துவத்துறை, வேளாண்மை துறை, காவல் துறை, வனத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் ஜவ்வாது மலை வட்டார வளர்ச்சி அலுவலர்  செந்தில்குமார் முன்னிலை வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் அலுவலர்களை வரவேற்றார். இத்திட்ட வட்டார பணியாளர் முகமது நதீம் மற்றும் மாவட்ட திட்டக்குழு புள்ளியல் அலுவலர் புருஷோத்தமன்  சிறப்பு அலுவலர்களாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News