சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2021-06-26 07:50 GMT

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சியில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ராணி அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், ஆணையாளர் பாஸ்கரன், மேலாளர் மோகன், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், துணை சபாநாயகர்  கு. பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தச்சாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல், கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News