சேத்துப்பட்டு லூர்து அன்னை புஷ்பப் பல்லக்கில் பவனி
சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலய ஆண்டு திருவிழாவையொட்டி புஷ்பப் பல்லக்கில் பவனி நடைபெற்றது.;
தமிழகத்தின் இரண்டாவது வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயம் 127 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி ஆர்ச் பிஷப் லியோபோல் தேவாலயத்தை திறந்துவைத்து ஆண்டு பெருவிழா காண கொடியேற்றினார்.
அதைத் தொடர்ந்து தினமும் ஆலய வளாகத்தில் திருப்பலி நடைபெற்றது. சிறப்பு கூட்டு திருப்பலி விழா வேலூர் மறைமாவட்ட பங்குத்தந்தை ஜான் ராபர்ட் தலைமையில் விழா நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பேராயர் சின்னப்பா தலைமையில் ஜெபமாலை பாடியபடி வந்தவாசி சாலை வழியாக மாதா மலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
தூய லூர்து அன்னை, குழந்தை இயேசு, புனித அந்தோணியா,ர் புனித சேவியர் ஆகியோர் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கு மற்றும் தேரில் பவனி வந்தனர்.
விழாவில் தமிழகம் கேரளம் புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கிறிஸ்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.