சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Chethupattu Samathuva Pongal Celebration சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

Update: 2024-01-13 10:40 GMT

சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

Chethupattu Samathuva Pongal Celebration

சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, உதவி வேளாண்மை இயக்குனர் புஷ்பா தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலக வளாகத்தில் அலுவலர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையல் போட்டு, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு வழிபாடு செய்தனர்.

இதில், தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவகுமார், வேளாண்மை அலுவலர் முனியப்பன், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜாராம், முருகன், பாஸ்கரன், செல்வரசு, சரவணன், உள்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

சேத்துப்பட்டில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

சேத்துப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு கடையில், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அனைத்து அரிசி வாங்கும் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பு ரூபாய் ஆயிரம், முழு கரும்பு, வேட்டி – சேலை, பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றை பேரூராட்சி தலைவர் சுதா முருகன் வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பேரூராட்சி மூத்த உறுப்பினர், திமுக நகர செயலாளர் இரா.முருகன், துணைத் தலைவர் திலகவதி செல்வராஜன், கூட்டுறவு வங்கி செயலாளர் நடராஜன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பழம்பேட்டை மேட்டுத் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு கடை, பெரிய மசூதி அருகே உள்ள கற்பகம் கூட்டுறவு கடை, கண்ணனூரில் உள்ள கூட்டுறவு கடை ஆகிய பகுதிகளிலும், பேரூராட்சி தலைவர் சுதா முருகன் பொங்கல் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதேபோன்று, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பெரணம்பாக்கம் கிராமத்தில் ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், தமிழக அரசின் பொங்கல் பரிசை வழங்கி தொடங்கி வைத்தார்.

Similar News