தந்தை புகாரின் பேரில் பெண் சடலத்தை தோண்டியெடுத்து மறு பிரேத பரிசோதனை

Chethupattu Near Re Postmortem சேத்துப்பட்டு அருகே, மகளின் சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிணத்தை தோண்டியெடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.;

Update: 2024-01-13 10:24 GMT

(பைல் படம்)

Chethupattu Near Re Postmortem 

சேத்துப்பட்டு அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் என புகார் எழுந்த நிலையில், சடலத்தை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் முனீர்பாஷா. இவரது மனைவி சமிமாபீ . இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.குடும்பத் தகராறு காரணமாக சமிமாபீ, கடந்த 6ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, இவரது உடல், சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சமிமாபீயின் சாவில் மர்மம் உள்ளது என அவரது தந்தை சாதிக்பாஷா, சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவுசெய்து  தாசில்தார் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து,  காலை பழம்பேட்டை இடுகாட்டிற்கு சென்ற போலீசார், தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் சமிமாபி உடலை தோண்டி எடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள், மறு பிரேத பரிசோதனை செய்தனர். இச்சம்பவத்தால் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு காணப்பட்டது.

பைக் மோதி பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் தாண்டவமூா்த்தி.இவரது மனைவி உமாரஞ்சனி, இவா், நேற்று  மாலை அப்பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சாலையை கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த பைக் உமாரஞ்சனி மீது மோதியது.இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் உமாரஞ்சனி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Tags:    

Similar News