சேத்துப்பட்டு திமுக கவுன்சிலர் ராஜினாமா
சேத்துப்பட்டு 5-வது வார்டு உறுப்பினரான தி.மு.க.கவுன்சிலர் தனத பதவியை ராஜினாமா செய்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் வழங்கினார்.;
சேத்துப்பட்டு 5-வது வார்டு உறுப்பினரான தி.மு.க.கவுன்சிலர் தனத பதவியை ராஜினாமா செய்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் வழங்கினார்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு 5, வது வார்டு உறுப்பினராக தி.மு..வை சேர்ந்த செல்வகுமாரி செந்தில் பதவி வகித்து வருகிறார். சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தியிடம் கடிதத்தை வழங்கினார். அப்போது சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எழில்மாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், மணிமாறன், சேத்துப்பட்டு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் (மேற்கு) செந்தில், துணை அமைப்பாளர் அண்ணாதுரை மற்றும் மணிமாறன்ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா ராஜசிம்மன் உள்பட பலர் உடனிருந்தனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், சேத்துப்பட்டுஒன்றிய குழுவில் 17 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் 5-வது வார்டு கவுன்சிலர் செல்வகுமாரி செந்தில் பதவியை ராஜினாமா செய்ததால் ஒரு இடம் காலியாக உள்ளது. தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.