ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு

கண்ணமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-07-09 06:44 GMT

கண்ணமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள 1200 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், கண்ணமங்கலம் அடுத்த ராமசாமி குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முன்மாதிரி தொடக்கப்பள்ளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை  சென்னை ஐ எஸ் ஓ (ISO) இயக்குனர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தனியார் பள்ளிகளை போல் நுழைவுவாயில் கோயில் போன்று சிறப்பாக உள்ளது எனவும் கை கழுவும் முறை, நூலகம், மூலிகை பண்ணை, கணினி அறை, வண்ணம் தீட்டிய சுற்றுச்சுவர், விளையாட்டுத் திடல், சுத்தமான கழிவறைகள், என பள்ளியில் சிறப்பான வசதிகள் உள்ளதை பார்வையிட்டு பாராட்டினார்.

மேலும் இப்பள்ளி சத்துணவு கூடத்தை முன்மாதிரியாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  உடன் இருந்தனர்.

Tags:    

Similar News