நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.;
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஷ்ணு பிரசாத் இடம் பேரூராட்சி மன்ற தலைவர் ராணி சண்முகம் தலைமையிலான உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் போளூர் வழியாக வாரத்தில் மூன்று நாட்கள் செல்லும் மும்பை தாகூர் ரயிலை தினசரி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் போளூர் ரயில்வே நிலையத்தில் திருப்பதி மன்னார்குடி ரயில் , ராமேஸ்வரம் திருப்பதி விரைவு ரயில் , புதுச்சேரி ஹவுரா விரைவு ரயில் ஆகிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் வேலூர் கண்டோன்மென்ட் ரயிலை போளூர் வழியாக தினசரி இயக்க வேண்டும். போளூர் தபால் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு போளூர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போளூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.