சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.;

Update: 2021-12-29 07:47 GMT

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா  தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி.பி.அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் இலக்கிய அணி மாவட்ட தலைவர் தசரதன், நகர தலைவர் ஜாபர் அலி, மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News