போளூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

போளூரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-03-30 13:16 GMT

போளூர் துணை காவல் கண்காணிப்பாளர்  குணசேகரன் உத்தரவின் பேரில், ஆய்வாளர்  ஜெயப்பிரகாஷ் தலைமையில், போளூரில் உள்ள கடைகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பெரியார் சாலையில் கடை வைத்திருக்கும் சர்தார் அலி (வயது 37) மற்றும் புது மசூதி தெருவில் கலிலூர் ரஹ்மான் என்ற பாபு (44) ஆகியோர் கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது,  கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 2 கடைகளிலும் இருந்து ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 240 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News