மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது
போளூர் வட்டார வளமையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாற்றுத்திறன் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்
மாற்றுத்திறன் தன்மையை ஆரம்ப கால அடையாளம் காணுதல் சிகிச்சை முக்கியத்துவம் பகல் நேர பராமரிப்பு மைய செயல்பாடுகள் உள்ளடங்கிய கல்வியில் பணி புரியும் சிறப்பு பயிற்சி வீடு சார்ந்த பயிற்சியில் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் பராமரிக்கும் முறை உதவி உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளும் முறை பற்றி விளக்க படங்களுடன் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைத்து பெற்றோர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் கருத்தாளர்களாக கலா வெங்கடசுப்பிரமணியம் விஜயலட்சுமி ஸ்டெல்லா ஜீவ ராணி, தங்கமணி தசை பயிற்றுநர் மகாலட்சுமி கிராம சுகாதார செவிலியர்கள் மாலதி அங்கன்வாடி பணியாளர் வரலட்சுமி ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை கூறினர்.
முன்னதாக ஐ இ டி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வரவேற்றார். மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நாளை நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் நாளை 21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை ,ஆரணி ,செய்யாறு பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு பகுதி கோட்டாட்சியர்கள் தலைமையில் நடக்கும் இதில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.